Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பாலமலை அரங்கநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலமலை அரங்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அரங்கநாதர்
  உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர்
  அம்மன்/தாயார்: செங்கோதை அம்மன், பூங்கோதை அம்மன்
  தல விருட்சம்: காரை மரம்
  தீர்த்தம்: பால் சுணை, பத்ம தீர்த்தம், செங்கோதை சுனை, கன்னிகா சுனை
  ஆகமம்/பூஜை : தென்கலை பாஞ்சராத்திர ஆகமம்
  புராண பெயர்: பாலமலை
  ஊர்: கோவனுார்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பவுணர்மி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி சனிக்கிழமைகள், ஆழ்வார் உற்சவங்கள், மார்கழி உற்சவம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: காலை 5 மணி முதல் மாலை: 8 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலமலை அரங்கநாதர் கோவில், பாலமலை, கோவனுார், பெரியநாயக்கன்பாளையம்,கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91 9443348564 
    
 பொது தகவல்:
     
  அடிவாரத்திலிருந்து சந்திதானம் வரை 1.1/2 கிலோ மீட்டர் துாரம் படிக்கட்டுகள் ஏற வேண்டும். ஸ்ரீ ரங்கநாதர் கிழக்கு முகமாய், அநேக மண்டபங்ளோடும், தாயாருடனும் எழுந்தருளியுள்ளார். சன்னதியனுள் தாயார் சன்னதிகளும், தும்பிக்கையாழ்வார் சன்னதி, ராமானுஜர், காளிதாஸ் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.   
 
     
 
பிரார்த்தனை
    
  எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிப்பவர் 
    
நேர்த்திக்கடன்:
    
  திருத்தேருக்கு பழம் வீசுதல், அன்னதானத்திற்கு பொருள்கள் வழங்குதல் 
    
 தலபெருமை:
     
  சாபத்தால் ராட்சத உருவம் கொண்ட துர்தமன் வனத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அங்கு தவம் செய்து கொண்டிருந்த காலவ மகரிஷியை துன்புறுத்தினான். அவன் பிடியிருந்து விடுபட முடியாமல் தவித்த மகரிஷி, ஸ்ரீமன் லட்சுமி நாராயணை குறித்து தியானித்தார். அப்பரந்தாமனும் அருள்பாலித்து திருசக்கரத்தை பிரயோகித்து துர்தமனை கொன்று, மகரிஷியை காப்பாற்றினார். இந்த இடமானது இன்றும் பத்ம தீர்த்தம் அல்லது சக்ர தீர்த்தம் என்று பெயருடனே விளங்குகிறது.   
 
     
  தல வரலாறு:
     
  முன்னோரு காலத்தில்  ஒரு தொட்டியான் மாடு மோய்த்து கொண்டிருந்தான். தினமும் காராம் பசுவில் மாலைதோறும் பால் இல்லாமல் இருந்ததினால் மறுநாள் அதனை பின்தொடர்ந்து வரும்போது பாலைன புதரில் லிங்கத்தின் போரில் காராம் பசு பால் சொரிய அதை கண்டு தொட்டியான் மயங்கினான். அசரீரியாய் பால்கொண்டு பூஜித்தவா என வாக்களிக்க, தினமும் பூஜித்து வந்தான்.

அக்காலத்தில் கௌதன்ய மகரிஷி கோத்திரத்தில் பிறந்த காளிதாஸ், இதைகண்டு நைவேத்திய பூஜை செய்து பர்ணசாலை கட்டி பூஜித்து வந்தார். பின்னர் உங்கணகவுடர் சூரை சாளைகட்டி பூஜிக்க அவர் வம்சத்தில் பிறந்த நஞ்சுண்டகவுடர் அஸ்தகிரி கோபகிரி கொருடஸ்தம்பம் உற்சவ விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தி வந்தார். அதன் பின் பாரஸ்டு கார்டு முனியப்பிள்ளை அவர்கள் கோவில் படிக்கட்டுகள் கட்டினார். மறுபடியும் உங்கணகவுடர் வம்சத்தில் தோன்றியவர்கள் அடியார் கோஷ்டியுடன் யோசித்து மண்டபம் கட்ட கல் எழுப்ப வசதி இல்லாததினால் பசுவானை பிரார்த்திக்க கீலக வருஷம் வைகாசி மாதம் 15ஆம் தேதி இரவு 12 நாளிகை அளவில் திடீர் என்று வேட்டு எழுப்ப அதியத்துடன் போய் பாரக்க பாறை பாளம் பாளமாய் வெடித்திருப்பதை கண்டு ஆனந்தித்து சிற்பிகளை கொண்டு கட்டிடம் போட மணல் கிடையாததினால் பாகவதர் கனவில் தோன்றி சன்னதிக்கு வாயு மூலையில் ஒரு பர்லாங்கு துாரத்தில் குட்டையில் அடையாளம் வைத்திருக்கும் இடத்தில் ஒரு முழத்திற்கு கீழ்மணல் இருக்கிறது எடுத்து கட்டிடம் கட்டு என்று உத்தரவு ஆக காலையில் எழுந்து  போய் அடையாளத்தை பார்த்து தோண்டி கண்டுபிடித்து  கட்டிடங்களை கட்டி தெப்பக்குளம் கட்டி திருத்தேர் நடந்தேறி வருகிறது,மேற்படி இதர உற்சவத்தை பக்த பாகவத சிகாமணிகள் அனைவரும் ஆனந்தித்து தங்களால் இயன்ற பொருளுதவி செய்து இஷ்டகாரியார்த்தங்களை பெறுமாறு வேண்டுகிறோம்.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.