Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ரங்கநாதர்
  தீர்த்தம்: பால்சுனை, பத்மதீர்த்தம், செங்கோதை சுனை, கன்னிமார் சுனை, பசுமானி சுனை
  ஊர்: பெரியநாயக்கன்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ராபவுர்ணமி அன்று திருத்தேர் நிகழ்ச்சி நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், பாலமலை, பெரியநாயக்கன்பாளையம் - 641020. கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-94433 48564 
    
 பொது தகவல்:
     
  வழியெங்கும் நிழல் தரும் மரங்கள் இருப்பதால் மலை ஏறும் களைப்பு பக்தர்களுக்கு தெரிவதில்லை. சமீபகாலத்தில் கோயில் கட்டடத்தை கட்ட கற்கள் இல்லாததால் கோயிலின் பக்தர்கள் சஞ்சலமுற்று ஏங்கி தவித்தனர். அப்போது ஒரு நாள் திடீரென பயங்கரமான சப்தம் கேட்டது. மறுநாள் காலை பார்த்தபோது பெரிய பாறை ஒன்று பிளவு பட்டு கிடந்தது.பின்னர் அதில் இருந்த கற்களை கொண்டு கோயில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கோயிலுக்கு மேலே நான்கு கார்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் ஒன்று பெரிய மண்டபம் ஒன்றை கட்டி கொடுத்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் பத்ம தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளம் தூர் வாரப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  சாபங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  கோயிலில் விந்தைகள் பல புரிந்து பக்தர்களின் மனங்களை குளிர வைத்த ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.தாயார் சன்னதியும் தும்பிக்கையாழ்வார் சன்னதிகள் தனித்தனியாய் இருக்கின்றன. கோயிலை சுற்றிலும் சுவாமி உற்சவ காலத்தில் திருத்தேர் வலம் வரவும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஏக காலத்தில் பெருமாளை தரிசிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை பல வியாதிகளை போக்ககூடிய வகையில் இருப்பதால் பலர் இக்கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். கோயில் அருகே இருளர் என்னும் மலை ஜாதியினர் வசித்து வருகின்றனர். கோயிலுக்கு முன்புறம் உள்ள திருத்தேர் கை தேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டு அழகுற விளங்குகிறது. சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். உட்பிரகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், ராமானுஜர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் காலவ மகரிஷி இறைவன் நாரயணனைக் குறித்து பல ஆண்டுகள் தவம் இருந்தார். அப்போது, விஸ்வாசு என்ற கந்தவர்னின் குமாரன் துர்தமன் தனது மனைவிகளோடு குளத்தில் நீராடி கொண்டு இருந்தான். கைலாசத்தில் இருந்த ஈஸ்வரனை வழிபட்டு வசிஷ்ட முனிவர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, துர்தமன் மனைவிகள் நீராடுவதை நிறுத்தி கொண்டு குளக்கரையில் ஏறி கொண்டனர். ஆனால், துர்தமன் தொடர்ந்து ஆடை அணியாமல் குளித்துக் கொண்டு இருந்தான். இதனால் சினமடைந்த வசிஷ்ட மகரிஷி துர்தமனை அரக்கனாக சபித்தார். இதனால் துர்தமனின் மனைவிகள் கலக்கமடைந்தனர். தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டும் என்று வசிஷ்ட மகரிஷியிடம் வேண்டினார். அவர்கள் பிரார்த்தனையால் மனமிரங்கிய வசிஷ்டரும் இன்னும் சிறிது காலத்தில் உங்கள் நாயகன் உங்களை வந்தடைவான் என்று கூறினார். அது வரை நீங்கள் பகவானை பூஜித்து வாருங்கள் என்றார். இதன்படியே துர்தமனும் பல ஆண்டு காலம் காடு மேடுகளில் சுற்றி அலைந்தான். இந்நிலையில் காலவ மகரிஷியை கண்டு ஆந்திரமடைந்து அரக்க உருவில் இருந்த துர்தமன் காலவ மகரிஷியை துன்புறுத்த துவங்கினான். அரக்கனின் பிடியில் சிக்கி தவித்த காலவ மகரிஷி பெருமாளை வேண்ட பெருமாளும் திருக்கரத்தை பயன்படுத்தி அரக்கனை அடக்கினார். பின்னர், காலவ மகரிஷி பெருமாளை வழிபட்டார். துர்தமனும் சாப விமோசனம் பெற்றான். இந்த நிகழ்வு இங்கு நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் நந்தபூபாலர் என்ற அரசர் ஆட்சிசெய்து வந்தார். இவருடைய மகன் தர்மகுப்தர். நந்தபூபாலர் ஆட்சியைத் துறந்து இறைவனை வழிபட காட்டுக்கு சென்றார். இந்நிலையில் நந்தபூபாலர் மகன் தர்மகுப்தர் நெறிதவறாமல் ஆட்சி செய்து வந்தார். ஒருநாள். தர்மகுப்தர் வேட்டையாட காட்டுக்கு சென்றார். மாலை மங்கியதும் அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் தர்மகுப்தர் ஒரு மரத்தின் மீது ஏறி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து கொண் டிருந்தார். அப்போது சிங்கத்தால் துரத்தப்பட்ட கரடி தர்மகுப்தன் ஏறி இருக்கும் மரத்தின் மீது ஏறி அவனருகே அமர்ந்தது. கீழே சென்றால் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்பதால், ""முதல் பாதி இரவு நீர் உறங்கி கொள்ளும் நான் காவல் காக்கிறேன். இரண்டாவது பாதி இரவில் நான் உறங்குகிறேன் நீர் காவல் காக்கவேண்டும்,'' என கரடி கூறியது. அதன் படியே தர்மகுப்தர் உறங்கினார். அப்போது கீழே இருந்த சிங்கம் கரடியை பார்த்து தர்மகுப்தரை கீழே தள்ளிவிடு என்றது. ஆனால் கரடி உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் நம்பிக்கை துரோகம் தான் அதனை நான் செய்ய மாட்டேன் என்றது. ஆனால் தர்மகுப்தரின் ஆதரவில் தூங்கும் கரடியை சிங்கத்தின் வார்த்தையில் மதி மயங்கிய தர்மகுப்தன் கீழே தள்ளிவிட்டான். அதிர்ஷ்டவசமாக தப்பித்த கரடியானது தர்மகுப்தரின் நம்பிக்கை துரோகத்தை பொறுக்காது தர்மகுப்தர் பைத்தியம் பிடிக்கும் படியாக சாபமிட்டது. இதனையடுத்து தர்மகுப்தரும் பல இடங்களில் பைத்தியம் பிடித்தவராக அலைந்து திரிந்தார். இதனை கேள்விபட்ட நந்தபூபாலர் மகன் தர்மகுப்தனை அழைத்து கொண்டு ஜைமினி முனிவரிடம் சென்றார். அவரும் தற்போது உள்ள பாலமலை பத்மதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுமாறு கூறினார். அதன்படியே செய்ய தர்மகுப்தர் பைத்தியம் தெளிந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.