Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தண்டுமாரியம்மன் (டென்ட்மாரியம்மன்)
  உற்சவர்: அகிலாண்டநாயகி
  தல விருட்சம்: துவட்டிமரம்
  தீர்த்தம்: சுனை நீர்
  ஆகமம்/பூஜை : திருமுறை ஆகமம்
  புராண பெயர்: கோவன்புத்தூர்
  ஊர்: கோயம்புத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை மாதம் நடக்கும் அக்னி(பூ) சட்டி ஊர்வலம் சிறப்பு. இதில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டு கோவை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடக்கும். ஆடி வெள்ளிகிழமை.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், அவினாசி சாலை, உப்பிலிபாளையம் கோயம்புத்தூர்- 641 018.  
   
போன்:
   
  +91 - 422- 230 0360, 9791760161, 230 4106, 93632 16808 
    
 பொது தகவல்:
     
  இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, லட்சுமி, முருகன், கருப்பராயன், முனியப்பன் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

அம்மன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். சுமார் 40 சென்ட் பரப்பளவில் கோயில் அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
 

அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பால்குடம், அக்னி சட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. அடி பிரதட்சணம், அழகு குத்துதல், முடி காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில் ஓர் சமயம் பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்பாளை வணங்கி தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு அத்தீர்த்தத்தை பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது.

மற்றொரு கருத்தின் படி "தண்டு' என்றால் "படை வீரர்கள் தங்கும் கூடாரம்' எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் "தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். அனைத்து மதத்தினரும் வழிபடும் தெய்வமாக திகழும் தண்டுமாரியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாக இருந்து நகரின் இரு கண்களில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறாள்.

தினமும் மாலை பக்தர்கள் தங்க தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். இக்கோயிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளை தினமும் வணங்கி வந்தான். அப்போது, ஒருநாள் இரவில் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில் வேப்பமரங்களுக்கும், காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருந்த நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.

கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள். அங்கேயே அம்பாளை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும் கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர்.

தண்டு(தங்கு) இடமாக இருந்துள்ளதால் இந்த அம்மன் தண்டு மாரியம்மன் என அழைக்கப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.