சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 49 · 103 / 159
வளையல் விற்றது ஏன்
மதுரை மீனாட்சியம்மன் இன்று வளையல் விற்ற அலங்காரத்தில் காட்சி தருகிறாள். தாருகாவன முனிவர்களின் மனைவிகள் அழகு, ஒழுக்கத்தில் தாங்களே சிறந்தவர்கள் என கர்வம் கொண்டனர். இதைப் போக்க திருவோடு ஏந்தியபடி அந்த பெண்களிடம் பிச்சைக் கேட்டு வந்தார் சிவன். அவரின் அழகைக் கண்டு மயங்கிய அவர்கள், தங்களின் வளையல்களை திருவோட்டில் பிச்சையாக இட்டனர். இதை அறிந்த முனிவர்கள், ‘திருவோடு தாங்கி வந்த சிவனைக் கண்டு மயங்கியதால் வணிகர் குலத்தில் பிறக்க கடவது’’ என சபித்தனர். விமோசனம் கேட்ட போது, வளையல் வியாபாரியாக வரும் சிவன் மூலம்சாபம் தீரும் என்றனர். அதன்படி மதுரைசொக்கநாதர் வளையல் வியாபாரியாக வீதியில் வர, அந்த பெண்களும் வளையல் வாங்கினர். ஆனால் அவர் அதற்கான விலையை நாளை பெறுவதாக கூறி நடந்தார். அப்பெண்கள் பின்தொடர கோயிலுக்குள் சென்று மறைந்தார். வியாபாரியாக வந்து ஆட்கொண்டவர் சொக்கநாதர் என உணர்ந்தனர்.