சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 56 · 115 / 159
சிவபெருமானின் செயல்கள்
- சிவன் நடத்திய திருவிளையாடல்கள் மனித சமுதாயத்தின் மீது இருந்த அன்பைப் வெளிப்படுத்துகிறது.
- உயிர்கள் வாழ இன்றியமையாது வேண்டப்படும் தண்ணீருக்காக வைகை ஆற்றை தோற்றுவித்தார்.
- இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேவை என்பதால் மேருமலையில் இருந்த செல்வத்தைக் கொடுத்தார்.
- புலவரின் வறுமையைப் போக்கக் கவிதை எழுதித்தந்தார்.
- ஆணவம் கொண்டவர்களின் அகந்தையைப் போக்கினார்.
- உண்மைக்குச் சாட்சியாய் இருந்தார்.
- தன் அடியவர்களின் துயரத்தைத் துடைத்தார்.
- நோயைப் போக்கினார்.
- இயல் தமிழில் கவிதை எழுதி இசைத் தமிழை எங்கும் பரப்பினார்.
- மனிதர்களுக்குப் பேரின்பத்தை வழங்கிய சிவபெருமான் நாரைக்கும் முக்தி கொடுத்தார்.
- உலகத்தில் உள்ள உயிர்கள் சிவபெருமானிடம் இருந்து வந்தவை என்பதும், அவை பிறவிப்பயனால் வினைகளைப் பெற்று பின்னர் வினை நீங்கி அவரிடமே சென்று சேரும் என்பதை சொல்கிறது திருவிளையாடல் புராணம்.