சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 63 · 128 / 159
மதுரை தலம் தொடர்புடைய பாடல்கள்
நல்ல என்ற சொல்லை 41 இடங்களில் பயன்படுத்துகிறார் திருஞானசம்பந்தர். இப்பதிகத்தை ஒரு முறை படித்தால் நவக்கிரங்கள் மட்டும் அல்ல பஞ்சபூதங்களும் நன்மை செய்யும்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு
இலங்க எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி
வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடு ஏழு பதினெட்டொடு
ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும்
மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி
வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை
கேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
செப்பிள முலை நல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான
பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
வேள்பட விழிசெய்து அன்று விடைமேல்
இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி
வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாக நாகம் முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும்
அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல்
துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள்
வானில் அரசாள்வர் ஆணை நமதே.
சொக்கநாதர்
பூவின் நாயகன் பூமகள் நாயகன்
காவின் நாயகன் ஆதிக் கடவுளர்க்கு
ஆவி நாயகன் அங்கயற்கண்ணிமா
தேவி நாயகன் சேவடி ஏத்துவாம்.