மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 64 · 138 / 159

மதுரை பழமொழிகள்

  • புதுபொண்ணு, புது மாப்பிள்ளையும் பார்த்தால் பெரியவர்கள் ‘மீனாட்சி சொக்கரும் போல வாழ்க’ என வாழ்த்துவர்.
  • காதுல காமாட்சி கழுத்துல மீனாட்சியுமா இருக்காளே
  • காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி மதுர மீனாட்சி
  • அம்மனுக்கு முதல்ல பூசை அதுக்கப்புறத்தான் சாமிக்கு பூசை
  • நீ என்ன மீனாட்சியா... ராத்தங்க மாட்டியோ
  • சோத்துக்குள் இருக்கார் சொக்கநாதர்
  • சொக்கர் காசு அக்கரைக்கு போகாது
  • மதுரை சுற்றிய கழுதையும் எங்கும் போகாது.
  • மங்கம்மா சாலை மலைமேல சோலை.
  • வைகை பெருகினா வையகமே செழிக்கும்
  • அழகர் ஆற்றில் இறங்கினால் அண்டமே அதிரும்
  • மதுரை மல்லிக்கு ஈடேயில்லை
  • மதுரை தெருவழகு. மன்னார்குடி மதில் அழகு.
  • மதுரை வீரன் துணையிருக்க பயமேன்.
  • மதுரைக்காரனிடம் வழி கேட்டா, வாயால சொல்ல மாட்டான். துணையாகவே வருவான்.
  • மதுரைக்காரன் தயிர் சட்டி உடைந்தாலும் வைகை நதியை தாண்டாது
  • வைய்ய வைய்ய வைரக்கல் திட்ட திட்ட திண்டுக்கல்.
  • மலையாளத்தில் உள்ள பழமொழி ‘மதுரையை பார்க்காதவன் கழுதை’
விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்