சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 30 · 31 / 159
தாமரைமலர் போன்ற மதுரை
தாமரை மலர் போன்று அமைக்கப்பட்ட மதுரை நகரில், அதன் இதழ்கள் போல வீதிகள் அமைக்கப்பட்டன. சித்திரை திருவிழாவின்போது சுவாமி, அம்பாள் தேரில் செல்கின்றனர். அப்போது நான்கு மாசி வீதிகளையும் தேர் சுற்றி வருகிறது. சதுர வடிவில் அமைந்துள்ள இந்த வீதிகளின் நான்கு முனைகளிலும் தேரை திருப்புவது சிரமம். எனவே, தேர் திரும்ப வேண்டிய இடத்திற்கு நேராக வடத்துடன் பக்தர்கள் தெருக்களில் நுழைவார்கள். அப்போது, தேரின் கீழே இருக்கும் கட்டை போடுபவர், லாவகமாக தேரை திசை திருப்புவார். தேரின் வடத்தை கொண்டு போவதற்காக அமைக்கப்பட்ட வீதிகள் என்பதால் இவை ‘வடம்போக்கு தெருக்கள்’ எனப்பட்டு, காலப்போக்கில் ‘வடம்போக்கி’ தெருக்கள் ஆகி விட்டன. தற்போதும் இந்த தெருக்கள் மாசி வீதியின் நான்கு திசைகளிலும் அமைந்துள்ளன.