சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 32 · 38 / 159
கடம்பவனம்
மதுரை முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. பின்னர் சிவபெருமான் கட்டளையின் பேரில் குலசேகர பாண்டியன் காட்டைத் திருத்தி நாடாக்கினான். அதற்கு அடையாளமாக கடம்பமரம் இத்தல விருட்சமாக உள்ளதையும், கோயில் வடக்கு சுற்றில் ஒரு கடம்ப மரம் இருப்பதையும் காணலாம். மேலும் இத்தல இலக்கியங்களில் கடம்ப வனம் என்றே குறிக்கப் பெறுகின்றது.