மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 38 · 65 / 159

சைவமடங்களில் அன்னதானம்

மதுரைக்கோயிலைச் சூழ்ந்துள்ள பல சைவ மடங்கள் இருந்ததையும் சில புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டதையும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உருவாக்குவதற்கும் இவற்றில் இருந்து அன்னதானம் வழங்குவதற்கும் தானங்கள் தரப்பட்டுள்ளன.

  • மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் சுந்தர பாண்டியன் திருமடத்தில் துறவிகளுக்கு உணவளிக்க நிலங்கள் தானமாகத் தரப்பட்டுள்ளன.
  • மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் இருந்த நரலோக சூரியன் திருமடத்தில் மகேஸ்வரருக்கு உணவளிப்பதற்காகப் பாகனூர் பகுதியில் இருந்த நிலங்கள் தானமாகத் தரப்பட்டுள்ளன.
  • மதுரையில் இருந்த சைவ மடங்களில் சிறப்பு வாய்ந்த மடங்களில் ஒன்றாகத் திருஞானசம்பந்த மடம் கல்வெட்டுக்களால் குறிப்பிடப்படுகிறது.
  • புவனேசுவீரன் மடம், தெற்கில் மடம், மானப் பெரியான் மடம் ஆகிய மடங்களில் ஆவணித் திருநாட்களில் போது நூறு பேர் வீதம் பத்து நாட்கள் ஆயிரம் அடியார்க்கு அன்னதானம் வழங்கப் பட்டுள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
  • திருவாலவாயுடையார் கோயில் பதியிலார் (தேவரடியாள்) சிவனைமுழுதுடையாள் என்பவர் சைவ மடம் ஒன்றினை ஏற்படுத்தியதைப் பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
விளம்பரம்
மேலே
விளம்பரம்