சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 40 · 69 / 159
மதுரையின் அடையாளம் நந்தி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே, வரலாற்றுச் சிறப்பு மிக்க புதுமண்டபத்தின் நுழைவாயிலுக்கு (எழுகடல் தெரு) அருகில் உள்ள பெரிய நந்தி சிலை மதுரையின் அடையாளத்தில் ஒன்றாகும். இந்த பிரம்மாண்ட நந்தி சிலை 17 ம் நூற்றாண்டில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரால் (1623–1659) புதுமண்டபம் கட்டப்பட்ட காலகட்டத்தில் நிறுவப்பட்டது. இந்த நந்தி சிலை ஒரே கருங்கல்லால் ஆனது. கோயிலுக்கு வெளியேயுள்ள புதுமண்டபத்தின் முன்பகுதியில், கிழக்கு கோபுரத்தின் வழியாக கருவறையில் உள்ள சுந்தரேஸ்வரரை (சிவன்) நேராகப் பார்த்தபடி கம்பீரமாக அமர்ந்துள்ளது.