மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 47 · 98 / 159

மதுரையின் மாண்புகள்

  • என்றென்றும் அருள் மழை பொழியும் அன்னை அங்கயற் கண்ணியும் சுந்தரேஸ்வரரும் கோயில் கொண்டிருக்கும் திருக் கோயிலாக மதுரை நகர் விளங்கி வருகிறது.
  • அருள் விளங்கும் கயிலாயத்தில் வீற்றிருக்கும் பார்வதி, பரமேஸ்வரர் ஆகிய இருவருமே சோமசுந்தர ராகவும், தடாதகைப்பிராட்டியாகவும் எழுந்தருளிய இடம் மதுரை.
  • கோயில்கள் பல உடையது என்பதால் இந்தத் திருத்தலம் கோயில் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. மதுரையின் ஆதார சக்தியாகவும், அணிகலனாகவும், மீனாட்சி சுந்தரேஸ்வரும் விளங்குகிறார்கள்.
  • மூர்த்தி (சொக்கநாதர்), தலம் (மதுரை), தீர்த்தம் (பொற்றாமரைக்குளம்) ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்றது மதுரை.
  • மீனாட்சி அம்மன் கோயில் கலைக் கூடமாக விளங்கி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
விளம்பரம்
மேலே
விளம்பரம்