Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காலகாலேஸ்வரர்
  அம்மன்/தாயார்: கருணாகரவல்லி
  தீர்த்தம்: காலபொய்கை தீர்த்தம்
  ஊர்: கோயில்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, ஆயுஷ்யஹோமம்  
     
 தல சிறப்பு:
     
  சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதும், மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளதும் தலத்தின் சிறப்பு. இங்கு மரகத நந்தி அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம், கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91 422- 265 4546 
    
 பொது தகவல்:
     
  இங்கு கால சுப்ரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்று இருப்பதால் இது சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும், விஷக்கடிக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் வஸ்திரம் சாற்றியும், நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்தும் வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பெரிய தட்சிணாமூர்த்தி: இக்கோயில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் லிங்கம் இருப்பது சிறப்பு. மூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.

ஆயுஷ்யஹோமம்:
இங்கு ஆயுள் விருத்திக்கு ஹோமம் நடக்கிறது. 60 வயது பூர்த்தியானவுடன் சஷ்டியப்தபூர்த்தி, 70 பூர்த்தியானவுடன் பீமரதசாந்தி, 80 பூர்த்தியான வுடன் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தியானவுடன் கனகாபிஷேகம் செய்யப்படுகிறது. அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதைச் செய்வது சிறப்பு.

தேன், சந்தன பிரசாதம்: நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது.

பச்சை நந்தி: இங்கு கால சுப்ரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்று இருப்பதால் இது சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது. மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது. தற்போது இதன் நிறம் மாறிவிட்டது. இங்குள்ள தீர்த்தம் காலபொய்கை (எமதீர்த்தம்) ஆகும்.
 
     
  தல வரலாறு:
     
  சிவபக்தனும், சிறுவனுமான மார்க்கண்டேயனுக்கு 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. அவனது தந்தை வருந்தினார். தந்தையின் துன்பத்தை தாளாத மார்க்கண்டேயன் ஆயுள்நீடிப்பு வேண்டி சிவபெருமானை வணங்கி வந்தான். ஆயுள் முடியும் நாளில் எமதர்மன் அவனது உயிரை எடுக்க வரவே, மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்குள்ள சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான். இருப்பினும் எமன் பாசக்கயிற்றை வீசவே, அந்தக் கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் கோபமடைந்த சிவன், என்னைச் சரணடைந்தவர் ஆயுள் நீட்டிப்பு பெறுவர், எனக்கூறி, எமனை எட்டி உதைத்தார். இதனால் சாதாரண மனிதனுக்கு ஒப்பாகி பூலோகத்தை அடைந்தான். மீண்டும் எமபதவி வேண்டி, கவுசிகபுரி என்னும் தலம் சென்று, அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவனாக எண்ணி வழிபட கல், விபூதி, வில்வம், ருத்ராட்சம் ஏதும் கிடைக்கவில்லை. அங்கே கிடந்த குச்சியை எடுத்து ஓரிடத்தில் குத்தினான். உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது. மணலுடன் நுரையை சேர்த்து லிங்கம் வடித்தான்.  அருகில் கவுசிக முனிவர் (விஸ்வாமித்திரர்) தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். எமனைக் கண்ட விஸ்வாமித்திரர்,  இந்த சிவபூஜையால் உன்னுடைய சாபம் நீங்கியது, என்று கூறி எமலோகம் செல்ல கூறினார். எமதர்மன் விட்டுச்சென்ற சிவலிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார்.  பிற்காலத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதும், மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளதும் தலத்தின் சிறப்பு. இங்கு மரகத நந்தி அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar