Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாகாளியம்மன்
  அம்மன்/தாயார்: மாகாளியம்மன்
  ஆகமம்/பூஜை : சிவாகம முறைப்படி
  ஊர்: சுக்கிர வாரப்பேட்டை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் பவுர்ணமி அமாவாசை தினங்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய பூஜைகள் நடைபெறுகின்றன. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் உண்டு. இக்கோயிலின் முக்கிய வருடத் திருவிழா ஆடிமாதம் 3 வது வாரத்தில் கொண்டாடப்படும் குண்டம் திருவிழாவாகும். இவ்விழாவில் எலுமிச்சை கனியை வேப்பிலையால் பந்து போல் சுற்றி, அதன் மேல் பூ சுற்றி குண்டத்தில் உருட்டி விடுவர். குண்டத்தின் மறுபக்கத்தில் அதை எடுத்து அம்மனின் பாதத்தில் வைத்து வேண்டி அக்கனியை உட்கொண்டால் திருமண தடை, பிள்ளைபாக்கியம், வியாபார விருத்தி போன்றவற்றில் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை தந்தருளும் வரப்பிரசாதியாக திகழ்கிறார். பேராசைக்கு பலன் இல்லை. தவறு செய்தால் நிச்சயம் தண்டனை என்பது இத்தலத்தின் தாட்பர்யம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (வெள்ளி காலை: 7.30 முதல் 12.00 வரை மாலை: 6.00 முதல் 8.30 வரை) 
   
முகவரி:
   
  அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், சுக்கிர வாரப்பேட்டை, கோயம்புத்தூர்.  
   
    
 பொது தகவல்:
     
  கருவறைக்கு பின்புறம் உள்ள மண்டபத்தில் கன்னிமூலையில் கணபதியும் வாயு மூலையில் முருகனும் நடுவில் துர்க்கையும் தெற்கு நோக்கிய வண்ணம் தட்சிணாமூர்த்தியும் விமானத்துடன் கூடிய தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி சன்னிதி விமானம் கல்லால மரத்தின் மீது உள்ளதுபோல் ஒரு வித்தியாசமான அமைப்பில் உள்ளது. மகா மண்டபத்தின் வெளியே குண்டமும் வடபுறத்தில் நவகிரஹ சன்னிதியும் உள்ளன. மகாமண்டபத்தில் அம்மனின் சிம்ம வாகனம் எழிலுடன் திகழ்கின்றது. மகா மண்டப சுவற்றின் மேல் பகுதியில் அஷ்ட லட்சுமிகளின் சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இவையனைத்தும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுதைச் சிற்பங்களே. ஆனால் பார்ப்பதற்கு கற்சிலைகள் போன்றே தோற்றமளிக்கின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை, பிள்ளைபாக்கியம், வியாபார விருத்திக்காக பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  கோவையில் பிரசித்திபெற்ற கோணியம்மனின் தங்கையாக இம் மாகாளியம்மன் விளங்குகின்றார். கோனியம்மனின் தேர்த்திருவிழாவின் ஓர் அங்கமாக நிகழ்கின்ற திருக்கல்யாண உற்வசத்திற்கு தாய் வீட்டு சீதன சீர்வரிசைகளை திங்கட்கிழமையன்று இக்கோயிலிருந்து கொண்டு செல்வதை நீண்ட காலமாக கடைபிடித்து வருகின்றனர். செவ்வாய் அன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் இக்கோயிலைச் சார்ந்தவர்கள் தாய் வீட்டு சார்பில் கலந்து கொள்வது வழக்கமாகும்.  
     
  தல வரலாறு:
     
  300 ஆண்டுகள் தொன்மையான திருத்தலம். கோவை மாநகரின் மையப்பகுதியான சுக்கிர வாரப்பேட்டை அருகில் உள்ளது. ஒருமுறை கேரளாவிலிருந்து மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனைத் தரிசிக்க பூசாரியுடன் சென்ற குழுவினர் மனதார வேண்டி தரிசனம் செய்தனர். இந்த அம்மன் நமது ஊரிலேயே எழுந்தருளி அருள்பாலித்தால் எப்படி இருக்கும் என எண்ணினர். மேலும் தமது ஊருக்கு அழைத்துச் சென்று கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்யவும் விரும்பினர். அம்மனை பிரார்த்தித்து தங்கள் வேண்டுகோளை வைத்தனர். நீண்ட நேர அமைதிக்குப் பின் அம்மன் நேர அமைதிக்குப் பின் அம்மன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் வர ஒப்புக்கொண்டார்.

அத்துடன் ஒரு நிபந்தனையும் விதித்தார். நீங்கள் என்னை அழைத்துச் செல்லும் போது மேள தாளத்துடன் முன்னே செல்ல வேண்டும். நான் உங்கள் பின்னே சிறிது தூரம் தள்ளி நடந்து வருவேன். அதற்கு அறிகுறியாக எனது கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே வரும். யாரும் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி திரும்பி பார்த்தால் நான் திரும்பிச் சென்று விடுவேன் என்றார். அனைவரும் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். அம்மனை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு செல்லும் போது கோவை வழியாகச் சென்றனர். தீடீரென கொலுசுச் சத்தம் நின்றது. சிறிது நேரம் அனைவரும் அமைதி காத்தனர். அதிர்ச்சி அடைந்தனர். திரும்பிப் பார்த்தால் அம்மன் கோபித்துக் கொண்டு திரும்பிச் சென்று விடுவாரே என்ற அச்சத்தில் காத்திருந்தனர். சிறிது நேரம் இடைவெளிக்குப் பின் மறுபடியும் அம்மன் நடையைத் தொடர கொலுசு சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஒரு வித நிம்மதியுடன் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்படி அம்மன் நின்ற இடம் தான் தற்போது கோயில் அமைந்துள்ள இடம்.

கோயில் இருக்கும் இடம் வாணிபர் வீதி ஆகும். இக் கோயிலுக்குச் சொந்தமான நந்தவனத்திற்கு அருகிலும், தெப்பகுள வீதி சாரதா பாட சாலை மைதானத்திலும் குடிநீருக்கு ஆதாரமாக இருகுளங்கள் இருந்தன. மாதே ராஜ குளம் சிக்கே ராஜ குளம் என டணாயக்கன் கோட்டை தண்ட நாயக்கர்கள் பெயரில் அவை அழைக்கப்பட்டன. கோவையை மைசூர் அரச பிரதிநிதிகளாக ஆண்டவர்கள் இவர்கள். நகரின் சுகாதாரம் காக்கவும் தற்கொலைகளைத் தடுக்கவும் 1920 முதல் 1930க்குள் இந்த இரு குளங்களையும் நகரசபை மூடி விட்டதாக இதுவோ எங்கள் கோவை எனும் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி வாணிபர்கள் மிகுந்த பகுதி. பெரியவர்கள் எல்லாம் ஒன்றுகூடி முடிவெடுத்து ஒரு சிறிய அளவில் கோயிலும், குளத்தருகே நந்த வனத்தையும் அமைத்து தினசரி பூஜைகளைச் செய்து வந்தனர். அம்மனை மாகாளி எனும் திருநாமத்தில் வணங்கி வந்தனர். அப்பகுதி விரிவடைந்து மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க கோயில் விரிவாக்கமும் தொடர்ந்து நடந்து வந்தது. நேரு அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்த ஆர்.கே. சண்முகசெட்டியாரும் அவர் குடும்பத்தாரும் இக் கோயிலைத் திருத்தியமைத்து திருப்பணியை மேற்கொண்டனர். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் என அமைத்து வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கருவறையில் அம்பாள் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபிணியாய் அற்புத திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar