அரச மரத்தடியில் அமைந்துள்ள ராஜ கணபதி, இடது பக்கம் சிவன், வலது புறம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். மற்றபடி கோவில் மேற்கூரையிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
மனமிறங்கி வேண்டுபவர்களுக்கு இன்னல்களை நீக்கி அருள் கொடுக்க கூடியவர். பக்தர்கள் மனதில் வேண்டியது அனைத்தும் நன்றாக நடந்தால் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மனமுருகி வேண்டுபவர்கள், விபூதி மற்றும் மஞ்சள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர். தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்யலாம். காரியங்கள் கை கூடியவர்கள் விநாயகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் வாங்கி தந்துள்ளனர். காரியம் நிறைவேறினால், தேங்காய் உடைத்து, அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுகின்றனர்.
தலபெருமை:
முழு முதற் கடவுளான விநாயகப்பெருமான் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சமாக
உள்ளது. கிழக்கு முகம் பார்த்து அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சம்.
தல வரலாறு:
அரச மரத்தடியில் ஒரு சிறுவன் விநாயகப்பெருமான் சிலை இருப்பதை காண்பித்த பின் இக்கோயில் உருவாகியதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கோயில் கட்டவில்லை; பின் கட்டப்பட்டது. 1986ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின், 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.