கிழக்கு முகம் பார்த்து கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அனுமன் உபபரிவாரங்கள், அம்மன் தெய்வங்கள் கிழக்கு முகம் பார்த்தே உள்ளன.
பிரார்த்தனை
வீரம் பெற, நோய் போக, படிப்புகளில் சிறப்பாக உள்ள, கல்யாணம் பெற, குழந்தைகள் நலம் பெற வேண்டிக்கொள்கின்றனர். வேலை சிறப்பு பெறவும் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வெற்றிலை மாலை, வடைமாலை, எலுமிச்சம்பழம் மாலை, துளசிமாலை மற்றும் பொங்கல், பால்சோறு வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இக்கோயிலில் உள்ள அனுமந்தராய சுவாமி (அஷ்டாம்ஸம்) 8 விதமான சிறப்பு அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். வரம் தரும் வலது கரம், எதிரிகளை அழிக்க இடது கடத்தில் தாமரை, சகல வியாதிகள் நீங்க கிழக்கு நோக்கிய முகம், யம பயம் நீங்க வடக்கு நோக்கிய பாதம், நவக்கிரக தோஷம் நீங்க வடக்கு நோக்கிய வால், ருத்ராம்மான அமைப்பு, ஜீவ நேத்ரம் (உயிரோட்டமான பெரிய ஒளிவீசும் கண்கள், லட்சுமி கடாட்சமான அனுக்கிரகம்.
தல வரலாறு:
தென்னகத்தில் அனுமனுக்கு பரவலாக தனிக்கோயில்கள் பல இருந்தாலும் கோவை மாவட்டம் பேரூர் பட்டீசுவரர் கோயிலின் வடபுறம் நெய்யல் ஆற்றங்கரையோரம் மிக கம்பீரமான அனுமந்தராயர் எனும் நாமத்தோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயில் சுமார் (1000)ஆயிரம் ஆண்டிற்கு முன் முசுகுந்தன் என்னும் அரசனால் கட்டப்பட்டது. இவ்வரசனுடைய திருவுருவம் மற்றும் வரலாறு பேரூர் கோயில் கல்தூண் ஒன்றில் இன்னும் காணலாம். சோழர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டு பல முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் வழிபட்டு பேர் பெற்றுள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்தது இக்கோயில்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அஷ்ட அம்சம் கொண்ட ஆஞ்சநேயர் அருள்பாலிப்பதால் சிறப்புமிக்கதாகும்.