Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கரிவரதராஜப்பெருமாள்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
  ஊர்: சின்ன தடாகம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் சனிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமை, தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆகிய நாட்களில் திருமஞ்சனம் அலங்கார ஆராதனைகள் உண்டு. தமிழ்மாத முதல் சனிக்கிழமைகளில் உட்பிரகார புறப்பாடும் நடைபெறும். சுவாதி நட்சத்திரதன்று நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வைகுண்ட ஏகாதசியும் 3 நாள்கள் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியும் இத்தலத்தின் வருட முக்கிய பெரு விழாக்கள் ஆகும். கிருஷ்ண ஜெயந்தியன்று உரியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கிருஷ்ணர் வேஷத்துடன் குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என கண்கொள்ள காட்சிகளாகும்.  
     
 தல சிறப்பு:
     
  கரிவரதராஜப் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் நின்ற கோலத்தில் இடது கரத்தை இடுப்பில் தாங்கியும் வலது கரத்தை தன் பாதத்தைக் காட்டி கீழ் நோக்கிய நிலையில் வைத்த வண்ணம் விளங்குகின்றார். இக் கோலத்தில் உள்ள பெருமாளை வேங்கட வரதன் என்பர். இக்கோலம் நமக்கு உரைப்பது என்ன? “நீ பாதத்தை சரணாகதி அடைவாயாக, உன் துன்பங்கள் யாவும் நீங்கி எல்லா வளங்களும் உன்னைச் சேர்ந்தடையும்” என்ற தத்துவத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இப்பெருமாளின் சிலாரூபம் திருப்பதி வெங்கடாசலபதியை ஒத்திருப்பது சிறப்பு அம்சமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் கோயில் சின்ன தடாகம் கோயம்புத்தூர்  
   
போன்:
   
  +91 97880 03465 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. நுழைவு வாயில் மண்டபத்தின் மேல்புறம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரி வரதராஜபெருமாளும் வலப்புறத்தில் கருடாழ்வாரும் இடப்புறத்தில் ஆஞ்சநேயரும் கை கூப்பிய வண்ணம் சுதைச் சிற்பங்களாக திகழ்கின்றன. பெருமாளின் கீழ்ப்புறத்தில்  சங்கு சக்கரத்துடன் கூடிய நாமம் உள்ளன. நுழைவு வாயிலின் இருபுறம் உள்ள மதிற்சுவற்றின் மீது பக்கத்துக்கு ஆறு ஆழ்வார்கள் என பன்னிரு ஆழ்வார்களின் சுதைச் சிற்பங்களைக் காணலாம். உள்ளே நுழைந்தவுடன் உள்ளது தீபதூண் மண்டபம். பலி பீடத்தை அடுத்துள்ளது 28 தூண்கள் தாங்கியபடி அமைந்த மஹா மண்டபம் இம்மண்டபத்தில் அர்த்த மண்டபமும் கருவறையும் உயர்ந்த பீடத்தில் அமைந்துள்ளன. அர்த்த மண்டப வாசலின் இருபுறமும் ஜெயன் விஜயன் என இரு துவாரபாலகர்கள் கம்பீரமாக காவல் புரிகின்றனர்.

கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். எதிரே பெருமாளை நோக்கிய வண்ணம் பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் இருகரங்களை கூப்பிய வண்ணம் சிறிய விமானத்துடன் கூடிய தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு திருமணத் தடை நீங்க ஜாதகத்தை பெருமாள் பாதத்தில் வைத்து பூஜித்து வந்தால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறுகிறதாம். ஜாதகத்தில் கடுமையான நவகிரஹதோஷம் இருந்தால் ஜாதகனை பெருமாளுக்கு தத்து கொடுத்து தத்து வாங்குதல் என்ற நிகழ்வு நடக்கிறது. அப்படிச் செய்யும் போது தோஷத்தின் கடுமை வெகுவாக குறைகின்றதாம். மேலும் நியமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, தீர்த்து வைக்கும் வர பிரசாதியாகத் திகழ்கின்றார். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
   கோவை மாநகரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் பசுமையான விளைநிலங்களும் குளங்களும் நிறைந்த பகுதி சின்ன தடாகம். குளங்களில் தாமரை மலர்கள் மலர்ந்து இருந்ததால் தாமரை தடாகம் என அழைத்து வந்தனர். சின்னச் சின்ன தடாகங்கள் இருந்ததால் ‘சின்ன தடாகம்’ என இவ்வூர் பெயர்பெற்றது. தற்போது இத் தடாகங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.  சில தாடகங்கள் இருந்த இடம்  தெரியாமல் அழிந்தும் விட்டன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள அனுவாவி மலை மற்றும் குருடி மலை ஆகிய இவ்விரு மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சமதள தரைப் பகுதிதான் சின்ன தடாகம் நாம் காண இருக்கும் கோயில் அமைந்த பகுதி இவ்வூராகும்.
கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விஷ்வக்சேனர், நரசிம்மர் மகாவிஷ்ணு, வராகப் பெருமான், கஜேந்திர வரதப்பெருமாள் (கஜமோட்சம் - ஆதி மூலம்) ஆகியோர் அருள்கின்றனர். மஹா மண்டபத்தின் கைபிடி சுவற்றை ஒட்டிய வண்ணம் ஞான சரஸ்வதி, சக்ரத்தாழ்வார் யோகநரசிம்மர், லட்சுமி நரசிம்மர், விஷ்ணுதுர்கா, (ஒரே சன்னதியாக காளிங்க நர்த்தனர் ராமானுஜர்) நம்மாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் சிறிய விமானத்துடன் கூடிய தனிச் சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.

மஹா மண்டப நுழைவு வாயில் மேல் பகுதியில் பெருமாளின் தசாவதார சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கோயிலின் வடபகுதியில் உள்ள மதிற்சுவற்றில் சொர்க்க வாசல் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் வித்தியாசமாக வில்வம் ஸ்தல விருட்சமாகவும் கிணற்று நீர் புஷ்கரணி தீர்த்தமாகவும் உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  ஆதியில் சென்னை மாகாணமாக இருந்த போது, மைசூர் நகரம் அதன் ஒரு பகுதியாக இருந்தது. மைசூர் நகரை திப்பு சுல்தான் ஆட்சி புரிந்து வந்தான். அவன் ஆட்சி காலத்தில் அப்பகுதியில் வசித்த மக்கள் சொல்லொனா துன்பத்தை அனுபவித்தனர். மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்தனர். வேறு எங்காவது குடி பெயர்ந்து நிம்மதியாக வாழ அவர்கள் மனம் ஏங்கியது. தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு ஊருக்குச் சென்று விடலாம் என சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்தனர். எங்காவது சென்று ஏதாவது ஒரு தொழிலைத் தேடிக் கொள்ளலாம் எனும் நம்பிக்கையுடன் புறப்பட ஆயத்தமாயினர். தங்களுடைய உடைமைகள், தாங்கள் பேணி வளர்த்து வந்த கால் நடைகள் ஆகியவற்றுடன் புறப்பட்டனர். புறப்படும்போது இத்தனை நாட்கள் தங்களைப் பாதுகாத்து அருள் புரிந்து வந்த தெய்வமாகிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் சிலாரூபங்களையும் தங்களுடன் எடுத்துக் கொண்டனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் ஓரத்தில் கால்நடையாக நடந்து வந்தனர். தற்போதுள்ள தமிழகத்தின் எல்லையாகிய சத்தியமங்கலத்தை அடைந்தனர். அந்த இடம் அவர்கள் மனதிற்குப் பிடிக்கவில்லை. எனவே மேலும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். சின்ன தடாகம் எனும் இடத்தை அடைந்தனர். தம் குழுவினர் அனைவருக்கும் மிகவும் பிடித்த தகுந்த இடமாக இருந்ததால் இந்த இடத்தைத் தேர்வு செய்தனர். இப்பகுதி மானாவாரி விவசாய பூமியாக இருந்தது. மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்த, மண்வளம் சொரிந்த, பசுமையான புல்வெளிகள் மிகுந்த பகுதியாக இருந்ததால், கால்நடை மேய்ச்சலுக்கு உகந்த இடமாக விளங்கியது.

குடியிருக்க ஏதுவான இடத்தை தேர்வு செய்யதுடன் தங்களுடன் எடுத்துவந்த சிலைகளை நிறுவ இடத்தை தேடினர். முடிவில் ‘பொன்ஏரி’ என அழைக்கப்படும் ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் நிறுவினர். தினசரி பூஜைகளையும் விழாக்களையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ்வூர் அந்த கால கட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. குடிபெயர்ந்து வந்தவர்கள் தங்களை விவசாயத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தனர். நீர் வளம் ஒரளவுக்குத்தான் இருந்தது. ஒரு சில சமயங்களில் குடிநீருக்காக நொய்யல் ஆற்றுக்குச் சென்று நீர் கொண்டுவந்த காலமும் உண்டு.

நாளடைவில் இப்பகுதியினர் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவினர். தற்போது கோவை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் கட்டுமானத்திற்கு தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதில் இவ்வூர் முன்னணியில் உள்ளது.

கோயில் சிறிய அளவில் இருந்ததாலும் சிதிலமடைந்து இருந்தாலும் ஊர் மக்கள் புதியதாக கோயில் எழுப்ப ஏகமனதாக முடிவெடுத்தனர். தலைசிறந்த சிற்பியை தேர்வு செய்து கோயில் வரை படத்தை தயாரித்து பின் சான்றோர்களின் அறிவுரைப்படி பல்வேறு திருத்தங்களுடன் இறுதி வடிவம் கொடுத்தனர். ஒரு நல்ல நாளில் பூமி பூஜை போடப்பட்டு கட்டுமானப் பணியைத் துவக்கினர். பொது மக்களின் பங்களிப்பாலும் பெருமாளின் பேரருளாலும் திருப்பணிகள் எந்த வித தொய்வும் இன்றி குறித்த காலத்தில் நிறைவடைந்தது. வேத விற்பனர்களின் பங்களிப்புடன் சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள  4.9.2016 அன்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் நடைபெற்ற 48 நாள் மண்டல பூஜையில் திரளான மக்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தது தினம் ஒரு திருவிழா போன்று அமைந்தது. எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல் “ஒரு கிராமத்தில் இப்படி ஓர் அற்புத பெருமாள் கோயிலா?” என அனைவரும் வியக்கம் வண்ணம் அமைந்தது பெருமாளின் கருணையினால்தான் என்கின்றனர். நேர்த்தியான கட்டிட வடிவமைப்பு துல்லியமாக வடிக்கப்பட்ட சிலா ரூபங்கள். நுணுக்கமான கட்டுமானங்கள் தான் இப்பெருமைக்கு காரணங்கள்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கரிவரதராஜப் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் நின்ற கோலத்தில் இடது கரத்தை இடுப்பில் தாங்கியும் வலது கரத்தை தன் பாதத்தைக் காட்டி கீழ் நோக்கிய நிலையில் வைத்த வண்ணம் விளங்குகின்றார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar