புரட்டாசி நவராத்திரி, காமாட்சியம்மன் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,
பள்ளிக்கூட வீதி,
சுண்டகாமுத்தூர்.
கோயம்புத்தூர்-10.
போன்:
+91 99421 73109
பொது தகவல்:
கோயில் அமைப்பு வடக்கு பார்த்துள்ளது. அம்மன் கிழக்கு திசை பார்த்துள்ளனர். சந்தான லட்சுமி வடக்கு பார்த்துள்ளனர். அத்துடன் ஏகாம்பரேஸ்வரர், குபேர விநாயகர், சுப்ரமணியர், விசாலாட்சி, சந்தான லட்சுமி, மகாலட்சுமி, துர்க்கை, நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி மற்றும் பல பிராத்தனைகள் செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
திருவிழாவிற்கு அம்மனுக்கு புடவை வாங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
மூன்று தலவிருட்ச மரங்கள் உள்ளது. 1. வில்வமரம் 2. மகிளம்மரம் 3. நாகலிங்கமரம் உள்ளது.
தல வரலாறு:
கடந்த அறுவது ஆண்டுகளுக்கு மூன்று பட்டாலியம் அம்மனை வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு இக்கோயிலில் 30 வருடங்களுக்கு முன்பு காமாட்சியம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இக்கோயிலில் இது வரை 3 கும்பாபிஷேகம் முடிந்துள்ளது. கடைசியாக 27.08.2007 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலை 24 மனை தெலுங்கு செட்டியார் புதுப்பித்து வழிபட்டு வருகின்றனர்.
இருப்பிடம் : கோவை டவுன்ஹாலிலிருந்து சிறுவாணி வழியில் 6 கி.மீ. துõரம் சென்று அங்கிருந்து இடதுபுறம் பாலக்காடு செல்லும் வழியில் 3 கி.மீ. துõரத்தில் உள்ள சுண்டகாமுத்தூரில் கோயில் அமைந்துள்ளது.