கோயில் கிழக்குமுகம் பார்த்துள்ளது. மூலவர் மற்றும் அனைத்து தெய்வங்களும் கிழக்கு திசை பார்த்துள்ளனர்.
பிரார்த்தனை
தடைபடும் திருமணங்கள் நடைபெற மற்றும் அனைத்து வேண்டுதலும் நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
மாலைகள் மற்றும் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
கடந்த 200 ஆண்டுகளாக இக்கோயில் பஜனை மடமாக இருந்தது. மட்டசாலையில் ஒரு போட்டோவை வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து பஜனை செய்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்கின்றனர். பிறகு 16.3.2011 அன்று நாயுடு சமூகத்தினர் சேர்ந்து கோயில் கட்டி பங்குனி மாதம் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோஷணம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத கல்யாண வெங்கடரமணசாமி, ஆண்டாள் நாச்சியார், ஜெகதேவிருத்ரம்மவார் ஆகிய தெய்வங்கள் சிலைகளை வைத்து கும்பாபிஷேகம் நடந்தது.
இருப்பிடம் : கோவை டவுன்ஹாலிலிருந்து மேற்கு நோக்கி வந்தால், வைசியாள் வீதி வழியாக கருப்பண்கவுண்டர் வீதி வந்து வலப்புறம் 100 மீட்டர் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. பஸ் எண்: 2,2ஏ,எஸ்17,எஸ்3ஏ,7,7சி,7டி