சித்திரை திருவிழா, தவிர செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகள்.
தல சிறப்பு:
அவிநாசி அருகே உள்ள கருவலுõர் மாரியம்மன் கோவிலின் சிறப்பை தழுவியது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்,
கிழக்கு தேவேந்திர வீதி (பாடசாலை வீதி),
நஞ்சுண்டாபுரம்,
கோயம்புத்தூர் - 641036
போன்:
+91 99767 55511, 9994810846
பொது தகவல்:
தலைவாசல் தெற்கு பார்த்தும், கிழக்கும், மேற்கும் வாசல் உண்டு. மூலவர், அர்த்த மண்டபம் தவிர கருப்பராயர், மாகாளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதி உண்டு.
பிரார்த்தனை
மனதில் நினைத்ததை நிறைவேற்றும் சக்தி இந்த அம்மனுக்கு உண்டு என மக்கள் பிராத்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
நினைத்த காரியம் நிறைவேறினால் பூவோடு எடுத்தல் முக்கிய நிகழ்வாகும்.
தலபெருமை:
200 வருடங்களுக்கு முன்பெற்றது இக்கோவில் தலம். இங்குள்ள கருப்பராயர் சன்னதியில் ஆடு, கோழி பலியிட்டு வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும்.
தல வரலாறு:
திருப்பூர் அவிநாசி கருவலூர் மாரியம்மன் சன்னதியிலிருந்து அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, நஞ்சுண்டாபுரம் நொய்யல் ஆற்றில் நீராடி விட்டு செல்லும் போது அம்மனை தூக்க முடியாத நிலையில் அங்கேயே சிறிய கோவில் அமைக்கப்பட்டு, வழிபட்டு வருகின்றனர். 200 வருடங்களுக்கு முற்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் புதுபிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அவிநாசி அருகே உள்ள கருவலுõர் மாரியம்மன் கோவிலின் சிறப்பை தழுவியது.