Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அத்தனூர் அம்மன்
  உற்சவர்: அத்தனூர் அம்மன்
  அம்மன்/தாயார்: அத்தனூர் அம்மன்
  தல விருட்சம்: நாகலிங்க மரம்
  தீர்த்தம்: கிணறு தீர்த்தம்
  புராண பெயர்: கணபதி
  ஊர்: கணபதி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஆடி வெள்ளிக்கிழமைகளில விசேஷ பூஜைகளும் நடைபெறும். வருடந்தோறும் ஊஞ்சல் விழா சிறப்பாக நடைபெறும். திருக்கல்யாண உற்சவம் உண்டு. மேலும் அனைத்து தெய்வங்களின் சன்னதிகளும் உண்டு என்பதால், விநாயகருக்கு சதுர்த்தி, முருகனுக்கு தைப்பூசம், சிவனுக்கு பிரதோசம், தட்சிணாமூர்த்தி குருபூஜை விழா, நாக வழிபாடு, கோமாதா பூஜை, பொங்கல் விழா ஆகியவை உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் வருடந்தோறும் ஊஞ்சல் விழா மிகச்சிறப்பாக நடைபெறும். அருள்மிகு அத்தனூரம்மையை போற்றும் வகையில்அத்தனூர் அம்மன் மாலை எனும் நூல் தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 6 மணி முதல் 9 மணி வரை மாலை: 4 மணி முதல் 8 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு அத்தனூர் அம்மன் ஆலயம், கணபதி, கோவை - 641006.  
   
போன்:
   
  +91 9865380099 
    
 பொது தகவல்:
     
  ணபதி என்னும் இப்பகுதி கோயமுத்தூரிலிருந்து வடக்கே சத்திமங்கலம் போகும் பாதையில் மூன்று கல் தொலைவில் உள்ள சிற்றூர். இப்பகுதியின் கிழக்கில் அம்மன் சந்நிதி வடக்கு நோக்கியுள்ளது. அத்தனூர் அம்மன் என்னும் இம்மூர்த்தம் சைவக்கிளைகளில் ஒன்றாகிய சாக்யேத்தின் பிரிவாகிய துர்க்கசமிசத்தைச் சேர்ந்த மகிடாசுர சங்கார சிலாவிக்கிரகமாகும். இவ்வம்மை ஒரு திருமுகமும், எட்டுத் திருக்கைகளும் கொண்டு விளங்குகின்றன. இரு திருக்கைகள் அபயவரதங்கள் கொண்டவை. ஏனை ஆறு திருக்கைகள் கதை, வாள், கபாலம், சூலம், மான், மழு ஆகியவற்றைக் கொண்டவை. இரு திருவடிகளும் மகிடாசூரனை ஊன்றி மிதித்துக் கொண்டிருப்பவை. ஆலயத்தில் மூலத்தானத்தில் அருள்மிகு அத்தனூர் அம்மனும் உள்மண்டபத்தில் நின்று கொண்டிருக்கும் நிருத்த கணபதி மூர்த்தியும், வெளிப்புறத்தில் ஒரு விநாயக மூர்த்தியும் இச்சந்நிதியில் உள்ளது. அம்மனுக்கு முன் சிங்க வாகனம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சுமி அம்மன், கோமாதா, நாகசக்தி ஆகிய உப தெய்வங்களும் உண்டு.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தைபேறு, திருமணமடை, தொழில் வளர்ச்சி மற்றும் எல்லா விதமான பிரச்சனைகளும் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. பேய்க்காய்ச்சல், வாந்திபேதி முதலிய நோய்கள் தீர பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக, காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், அங்கவஸ்திரம் சாத்துதல் ஆகியவற்றை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  அத்தனூர் அம்மையார் பூதவேதாள கணங்கள் புடைசூழ, அதிர்வேட்டெழும்பச் சிங்கவாகனத்தின் மீதேறிக் காலை யுச்சி வேளையிலும், மாலை யந்திப் பொழுதுகளிலும் பவனிவரக்கண்டு களித்த தொண்டினர் உண்டென இத்தலத்தினர் வழியே அறிகிறோம். முன்பிருந்த ஒரு பூசாரி வேடன், நாள்தோறும் திருத்தளிக்குள் வைத்துப்போன ஒரு கூடை பருத்திப்பஞ்சினை இரவு விடியும்முன் அம்மன் நூலாக நூற்று வைத்திருப்பதை, அன்னவன் விடிந்தபின் பூசையிடுவதற்கு வந்தபோது பார்த்து எடுத்துக்கொள்வது வழக்கம். பேய்க்காய்ச்சல், வாந்திபேதி முதலிய நோய்களை அம்மன் திருவருளால் நீக்கி வந்திருக்கின்றனர்.  இக்காலத்திலும் மெய்யன்பர்கள் மனவெளியில் வந்து கனவு, நனவுகளில் பாட்டுவித்தல், துதியேற்றல், மகப்பேறு அளித்தல் முதலிய திருவருள் வழங்கி வருதல் உண்மையாகும்.  அம்மன் அன்றுதொட்டு இன்றுவரை ஆடு, கோழி முதலிய பிணப்பலி ஏற்றுக் கொள்ளாமையும்,சுத்த பூசனை ஏற்றுக் கொண்டு அருள்வழங்கியும், அன்பு இரக்கம் முதலிய நல்லியல்புகளைப் பூண்ட உத்தமர்க்கு மாறிலா இன்பம் கொடுப்பவளாகவும், பிணப்பலி ஏற்காத இவ்வருஞ் செயல் அம்மன் சந்நிதியில் நிலவுவாதக நம்பப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  கணபதியில் அமைந்துள்ள பழமையான திருக்கோயில் எழுந்தருளி அருள்பாலிக்கின்ற அத்தனூர் அம்மை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மல்லூருக்குப் பக்கத்தில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் சிலர் கணபதிக்குக் குடிபெயர்ந்து வந்தபோது இங்கு எழுந்தருளச் செய்யப்பட்டாள் என்பது செவிவழிச் செய்தி.   பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர், பால வேளாளக் கவுண்டர்களால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த காங்கயம் என வழங்கும் காங்கேய நாட்டிலுள்ள அத்தனூரினின்றும் கணபதி என்னும் இத்தலத்தினுக்குக் கொண்டுவந்து கோயிலில் பிரதிட்டை செய்யப்பெற்றது. அத்தனூரிலிருந்து கொணர்ந்து இக்கணபதித் தலத்தில் நாட்டப்பெற்ற காரணத்தால் இதற்குக் கணபதி அத்தனூர் அம்மன் என்ற பெயர் வழங்கிவருகின்றது.

முற்காலத்தில் ஊஞ்சல் வனமாக இருந்தது. பின் அம்மன் உத்தரனின்பேரில் காடு கெடுத்து ஊராக்கப் பெற்றது. திருக்கோயில் எழுப்பப்பெற்றது. மூர்த்தி பிரதிட்டை செய்யப்பெற்றது. முன்னே, தாழபுரம், நல்லூர் என்னும் பெயர்களால் வழக்கப்பெற்றுப் பின்னே இவ்வூர் இரண்டும் மறைந்துபோய், அவை அமைந்திருந்ததாகச் சொல்லப்படும் கிழக்குத் திசையிலிருந்து மேற்குத்திசைக்கு நாளடைவில் மாறி, மாறி, தற்காலத்தில் உள்ளபடி, கணபதி என்னும் பெயரால் விளங்குகின்றது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அத்தனூரம்மையை போற்றும் வகையில்அத்தனூர் அம்மன் மாலை எனும் நூல் தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar