அம்மாவாசை, பெளர்ணமி, சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் ஐந்தாவது விளக்கு பூஜை கூடுதல் சிறப்பு. ‘சுகர்பணம்’ எனும் யாகம் இக்குல பெண்கள் சிறப்புடன் வாழ வருடாவருடம் நடத்தப்படுகிறது.
தல சிறப்பு:
கன்னிமார் தெய்வத்திற்காக தனி கோயில். பெரும்பாலான கோயில்களில் கன்னிமாருக்கு தனி சன்னதி மட்டும் இருக்கும். இங்கு மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை
முகவரி:
ஸ்ரீ கன்னிமார் கோயில்,
குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட்,
கோயம்புத்தூர் - 641105
போன்:
+91 97508 60255
பொது தகவல்:
கன்னிமார் மூலவராக அருள்பாலிக்கிறார். விநாயகர், முருகர், ஆதி கருப்பராயன், குதிரை வாகனம், வேட்டை கருப்பராயன் ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனை
தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகள் உண்டு.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு பட்டு சாத்துதல், பிரசாதம் வழங்குதல், விளக்கு வழிபாடு, அன்னதானம் வழங்குதல், பால் குடம் எடுத்தல் போன்றவை.
தலபெருமை:
கன்னிமார் தெய்வத்திற்காக தனி கோயில்.
தல வரலாறு:
சூலுார் அருகே உள்ள மூலக் குரும்பபாளையம் இவர்களது குலத்தெய்வக் கோயில். இவர்கள் அப்பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி இப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தததால் இப்பகுதி குரும்பபாளையம் என பெயர் வந்தது. பல ஆண்டுகளாக சூலுாருக்கு சாமி கும்பிட சென்ற இவர்கள், தாங்கள் வாழும் பகுதியிலே கோயில் அமைத்து வழிபட எண்ணி 30 ஆண்டுகளுக்கு முன் சிறு மேடை அமைத்து கன்னிமார் அமைத்து வழிபட துவங்கினர். பின் பக்தர்கள் உதவியுடன் கோயில் அமைக்க துவங்கி கடந்த ஆண்டு பூமி பூஜை செய்து, 21 நாளில் கட்டிய கோயில் இது. இவர்களது எல்லா கோயிலிலும் கோபுரம் அமைக்க மாட்டார்கள். குரும்ப கவுண்டரில் ‘அருது’ குலத்தவர் கோயில் வழிபாடு செய்யும் கோயில் இது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கன்னிமார் தெய்வத்திற்காக தனி கோயில்.
இருப்பிடம் : கோவை உக்கடத்திலிருந்து குரும்பபாளையத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி உள்ளது. மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து ஆட்டோக்களில் பயணிக்கலாம்.