பதிவு செய்த நாள்
19
நவ
2019
02:11
குளித்தலை: அய்யர்மலை, ரெத்தினகிரீஸ்வரர்கோவிலில், கார்த்திகை மாதம் முதல் சோம வாரம் நிகழ்ச்சி துவங்கியது. குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, 108 சிவதலங்களில் மேற்கு நோக்கி அமையப்பெற்ற சிவதலமாகும். 1,017 படிக்கட்டுகளை கொண்ட மலை உச்சி யில், சுரும்பார் குழலி உடனுறை ரெத்தின கிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகி றார். இக்கோவில் உள்ள மலையை திருவாட்போக்கிநாதர் மலை, மாணிக்கமலை, காகம்பற வாமலை என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இம்மலை, 220 ஏக்கர் நிலப்பரப்பில், அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் கார்த்திகை மாதத் தில், ஒவ்வொரு வார திங்கட்கிழமையன்று நடைபெறும் சோமவார விழாக்கள், சித்திரை மாதத்தில், 13 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா மற்றும் ஒவ்வொரு மாதமும் நடை பெறும் பவுர்ணமி கிரிவலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். மேலும் முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறு கிறது. நேற்று 18 ல்,முதல் சோமவாரம் நிகழ்ச்சியில் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து, மலை அடிவாரத்தில் உள்ள பொன்னிடும் பாறையில் சுவாமி தரிசனம் செய்தனர்.