ராமநாதபுரத்தில் ராமலிங்க விலாசம் அரண்மனை வெறிச்சோடியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2019 12:11
ராமநாதபுரம்: உலக பாரம்பரிய வாரம் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையை நேற்று (நவம்., 19ல்) ஆறு பேர் மட்டுமே பார்வையிட்டனர்.
ஆண்டுதோறும் நவ., 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப் படுகிறது. நமது பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், மக்களிடம் தொன்மையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பழமையான பொருட்களை போற்றி பாதுகாக்கவும் உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது குறித்து தொல்லியல் துறையினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாரம்பரிய வாரத்தில் தொல்லியல் துறையினர் பார்வையாளர்களை கட்டணமின்றி அனுமதி க்கின்றனர்.
இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் ராமநாதபுரத்தில் உள்ள ராம லிங்க விலாசம் அரண்மனையை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. இதுபோன்ற நேரங்களிலாவது தொல்லியல் துறையினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பாரம் பரிய சின்னங்கள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.