பதிவு செய்த நாள்
20
நவ
2019
01:11
திருப்பூர்:திருப்பூர், அவிநாசியிலுள்ள சிவாலயங்களில், தேய்பிறை அஷ்டமியான நேற்று (நவம்., 19ல்) பைரவருக்கு நடந்த சிறப்பு யாக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவனின் தத்புருஷ முகத்திலிருந்து ஜோதியாக தோன்றியவர் பைரவர். சிவாலயங்களில், வட கிழக்கு திசையில், இவருக்கு சன்னதி உள்ளது. காவல் தெய்வமாக வணங்கப்படும் பைரவரை அஷ்டமி நாளில் வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்; பாவங்களை யும், பயத்தையும் போக்குபவராக பைரவர் வணங்கப்படுகிறார்.
பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி மிக்க சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அவ்வகை யில், கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று (நவம்., 19ல்) சிவாலயங்களில் உள்ள பைரவர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், ஜென்மாஷ்டமி பைரவர் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடந்தது. பைரவருக்கு சிறப்பு யாக பூஜை, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. இவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று, காலபைரவ மூர்த்தியை வழிபட்டனர்.