வெள்ளகோவில்: தம்பிக்கலைய சுவாமி கோவிலில், நேற்று பாலாலய பூஜைகள் நடந்தன. வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் முருக்கங்காட்டு வலசு தம்பிக்கலைய சுவாமி கோவிலில், நேற்று (நவம்., 19ல்) பாலாலய விழா நடந்தது.
புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு, கோவில், கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.முன்னதாக விநாயகர் வழிபாடு, தம்பிக்கலைய சுவாமி சன்னதி முன் சிறப்பு யாக வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவ மூர்த்திகள், பாலாலயம் நடந்தது. அதன்படின், மஹா தீபாராதனை நடந்தது. திருப்பணி ஏற்பாடுகளை கோவில் குடிப்பாட்டுக் காரர்கள் மற்றும் முருக்கங்காட்டுவலசு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.