பாளை.சிவன் கோயிலில் சித்திரை திருவிழா 25ம் தேதி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2012 11:04
திருநெல்வேலி:பாளை.திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் வரும் 25ம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பாளை.திரிபுராந்தீஸ்வரர்(சிவன்) கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு சுவாமி மகுடவாகன வீதிஉலா நடக்கிறது.26ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி சப்பரத்திலும், இரவு கற்பகமரம் தாமரைப்பூ வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி வீதிஉலா நடக்கிறது. விழாவின் 6ம் நாள் இரவு 7.30 மணிக்கு 63 நாயன்மார்களின் வீதிஉலா மற்றும் யானை, அன்ன வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது.மே மாதம் 2ம் தேதி காலை 8 மணிக்கு வெள்ளைசாத்தியும், காலை 10 மணிக்கு பச்சை சாத்தியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும் 3ம் தேதி காலை 7.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. மேலும் விழாவின் 10 நாட்களும் தினமும் மாலை வேளைகளில் முக்கிய பிரமுகர்களின் ஆன்மிக சொற்பொழிவுகள், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.