பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
11:04
திருநெல்வேலி:தச்சநல்லூர் சிவன் கோயிலில் 20ம்தேதி சித்திரை திருவிழா துவங்குகிறது. 28ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் (சிவன் கோயில்) வருஷாபிஷேகம், சித்திரை திருவிழா 20ம்தேதி துவங்குகிறது. இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 7 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை நடக்கிறது.20ம்தேதி காலை 6.50 மணிக்கு கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. 10 நாட்கள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வாகன உலா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8ம்திருநாள் காலை நடராஜர் வெள்ளை, பச்சை சாத்தி வீதியுலா, மாலையில் கங்காளநாதர் வீதியுலா, இரவு சுவாமி, அம்பாள் தேர் கடாட்சம் நடக்கிறது.
28ல் தேரோட்டம்: 9ம்திருநாள் 28ம்தேதி காலை 6.45 மணிக்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுகின்றனர். 10.40 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. 10ம்திருநாள் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் முருகன், உலகம்மன் பக்த சேவா குழு, பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.