""உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்”என்கிறது இஸ்லாம். ஒருமுறை நபிகள் நாயகத்திடம், ""அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யலாம். பிறருக்கு அநியாயம் செய்பவனுக்கு எப்படி உதவ முடியும்?” எனக் கேட்டார். ""அநியாயம் செய்வதில் இருந்து ஒருவரைத் தடுக்க வேண்டும்; அவனுக்கு உதவும் வழி இதுவே” என்றார்.