* செய்த உதவிக்கு கைமாறு செய்யுங்கள். இல்லாவிட்டால் அவரை புகழுங்கள். இதுவும் ஒருவகை நன்றிக்கடனே. * மிருகங்கள் மனிதனைக் கண்டு பயந்தோடுவது போல, நன்றி கெட்டவனிடம் விட்டு இறையருள் ஓடி விடும். * இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியம். * உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நன்மை உண்டாக பிரார்த்தியுங்கள். அதுவே அவருக்கான நன்றிக்கடன். – பொன்மொழிகள்