திருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2019 01:11
திருப்பூர் : திருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு, வீரராகவப்பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை வைரவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, ஆறாட்டு விழா, இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு, மகா கணபதி ேஹாம பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஐயப்ப சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்லுக்கு எழுந்தருளுகிறார். அங்கு தெப்பகுளத்தில் ஆறாட்டு விழா மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வரும் 23ம் தேதி துவங்கி, டிச., 28 ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஐயப்ப பக்த ஜனசங்கம் மற்றும் ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.