சபரிமலை, சபரிமலை வரும் பக்தர்களுக்கு எஸ்.பி.ஐ மற்றும் தனலெட்சுமி வங்கிகள் சேவை செய்கிறது. இந்த இரண்டு வங்கிகளும் சன்னிதானம் மற்றும் பம்பையில் ஏ.டி.எம்., அமைத்துள்ளது. சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தலில் பக்தர்கள் கோயில் திருமுற்றத்துக்கு ஏறும் இடத்திலும், பம்பையில் ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தின் அருகிலும் ஏ.டி.எம்., அமைந்துள்ளது.தனலெட்சுமி வங்கி தேவசம்போர்டுடன் இணைந்து பிரசாத விநியோகம், காணிக்கை டெபாசிட் எடுத்தல் போன்ற பணிகளை செய்கிறது. கோயிலின் பின்புறம் வங்கி கிளை செயல்படுகிறது. எஸ்.பி.ஐ. வங்கியின் சர்வீஸ் கவுன்டர் கோயில் திருமுற்றத்தின் எதிரில் பெரிய நடைப்பந்தலில் அமைந்துள்ளது.