தொண்டாங்குறிச்சியில், அய்யப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2019 12:11
வேப்பூர்: வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சியில், அய்யப்ப சேவா சங்கம் சார்பில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியின் துவக்க விழா நடந்தது.மாவட்ட தலைவர் யாகமூர்த்தி தலைமை தாங் கினார்.
மாவட்ட செயலர் சுவாமிநாதன், மாவட்ட துணை தலைவர் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி திருமுருகன் வரவேற்றார். திட்டக்குடி டி.எஸ்.பி., வெங் கடேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முகாம் அலுவலர்கள் ராமமூர்த்தி, தங்கதுரை பங்கேற்றனர்.இதில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தங்கும் இடம், குடிநீர் வசதி செய்து கொடுத்து, 65 நாட்களுக்கு 400க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.