பதிவு செய்த நாள்
23
நவ
2019
12:11
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆத்ம நாதவனத்தில் காலாஷ்டமி விழா நடந்தது. பொள்ளா ச்சி அருகே தாடகை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆத்ம நாதவனம் சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர் கோவிலில், காலாஷ்டமி விழா நடந்தது.
விழாவையொட்டி கால பைரவருக்கு, 16 வகையான சோடஷாபிஷேகத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தெச்சி, பாரிஜாதம், நாகலிங்கம், செண்பகம், மனோரஞ்சிதம், வில்வம், தும்பை, தாமரை, அல்லி உள்ளிட்ட, 27 வகையான, ஆயிரம் கிலோ மலரால் கால சம்ஹார பைரவருக்கு புஷ்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.