Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் உற்சவ திருவிழா! பக்தர்கள் வெள்ளத்தில் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2012
11:04

ஈரோடு :ஈரோடு மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் வழிபாடு, 14ம் தேதி சிறப்பு கட்டமுது திருநாள், காலை 6 மணிக்கு சிவபெருமான் எழுந்தருளி, அப்பரடிகளுக்கும், அடியார்களுக்கும் கட்டமுது வழங்குதல், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. வரும், 15ம் தேதி காலை 7 மணிக்கு அம்பலவாணர் திருமுழுக்கு வழிபாடு, அப்பர் தில்லை திருநடனக் காட்சி கண்டு பதிகம் பாடல், கயிலை வாகனக் காட்சி நடந்தது. நேற்று, அப்பருக்கு பஞ்சநதியில் திருக்கயிலைக் காட்சி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மகிமாலீஸ்வரர், மங்களாம்பிகை திருக்கல்யாணம், இந்திர விமானத்தில் திருமணக்கோலத்தில் வீதியுலா நடந்தது. நேற்று தேர்த்திருவிழாவையொட்டி, காலை 6 மணிக்கு அப்பரடிகள் குரு வழிபாடு, மகிமாலீஸ்வரர், மங்களாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. காலை, 10.15 மணிக்கு, தேர்த்திருவிழா நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபாலன், மகிமாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரவி ஆகியோர் தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தனர். திருவேங்கட சாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, தேர் வலம் வந்தது. இரவு 10 மணிக்கு திருமுறை வாணர்களின் பதடிகச் செஞ்சொல் பாமாலை வழிபாடும், பொற்கிழி, பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று, மூவர் தேவராத் தமிழசை விழாயும், 22ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar