சாத்துார் : சாத்துார் அருகே தாயில்பட்டியில் சாய் பாபா வழிபாடு மற்றும் தியான பீடத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சிறப்பு யாகம் நடந்தது. அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்தார்.
இந்த யாகத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் சாய் பாபா மகிமைகள், குபேர பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு ஆள் மனது தியான பயிற்சி அளிக்கப்பட்டது. ஐயர் சுதர்சன சர்மா தலைமையிலான குழுவினர் வேள்விகளை நடத்தினர். இந்த பூஜையில் அமிர்தா பவுண்டேசன் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அமிர்தா பவுண்டேசன் செய்திருந்தது.