ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலை மழை நீர் மற்றும் கடல் நீர் சூழ்ந்ததால் தீவு போல காட்சி அளித்தது. தஞ்சம் அடைய ராமரைத்தேடி தனுஷ்கோடிக்கு வந்த ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக ராமர் அறிவித்து கடல் நீரை ஊற்றி பட்டாபிஷேகம் நடத்தினார்.
அதன் நினைவாக இங்கு கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த சில நாட்களாக வீசிய வட கிழக்கு பருவக் காற்று மழையால் கோதண்ட ராமர் கோயிலை சுற்றியுள்ள பல நுாறு ஏக்கரில் கடல் மற்றும் மழை நீரும் 2 அடி உயரத்திற்கு தேங்கியுள்ளதால் கோதண்ட ராமர் கோயில் தீவு போல் காட்சியளித்தது.