விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த லட்சதீப திருவிழாவில் இன் னிசை கச்சேரி நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 89ம் ஆண்டு லட்சதீப திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆர்த்தி இசை குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரைப்பட பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி கலந்து கொண்டு பல்வேறு பக்தி பாடல்களை பாடினார்.