Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் காணிக்கை ரூ.78.93 ... மயிலாப்பூர் மாட வீதிகள் ‘கிளீன்’ மயிலாப்பூர் மாட வீதிகள் ‘கிளீன்’
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்: கோவில்களில் உஷார்
எழுத்தின் அளவு:
வெடிகுண்டு மிரட்டல்: கோவில்களில் உஷார்

பதிவு செய்த நாள்

29 நவ
2019
12:11

மதுரை: தென் மாவட்ட கோவில்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் உட்பட முக்கிய கோவில்களில், ஆயுதம் தாங்கிய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென் மாவட்ட கோவில்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் தலைமையகத்தில் இருந்து, மதுரை , ஐ.ஜி., அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முக்கிய கோவில்களில், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மீனாட்சி கோவிலில், ஏற்கனவே, 150 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டலை அடுத்து, கூடுதலாக, 50 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை கமிஷனர் கார்த்திக் ஆய்வு செய்தனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் போலீசார் குவிப்பு: மதுரை மீனாட்சி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என மத்திய உளவுத்துறை எச்சரித்து, பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி வழக்கமாக கோயில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள 30 போலீசாருடன் மேலும் 50 போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு, கிழக்கு நுழைவு வாசலில் பக்தர்கள் தீவிர வெடிகுண்டு சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள், என போலீசார் தெரிவித்தார். 2013 ஏப்ரலில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் அன்று முதல் ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து, பக்தர்களை வெடிகுண்டு சோதனையிட்டு அனுமதித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar