Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை (டிச., 1ல்) ... ராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம் ராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதவுமலை நாதனை காணும் வழிதெரியுமா
எழுத்தின் அளவு:
கதவுமலை நாதனை காணும் வழிதெரியுமா

பதிவு செய்த நாள்

30 நவ
2019
01:11

தாண்டிக்குடி: இமயச்சாரலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் போல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் ஒரு சிவன் கொலுவீற்றிருக்கிறார். இங்கு சிவன் லிங்க வடிவமின்றி, சிவனாகவே காட்சியளிக்கிறார். இங்கும் சிவதரிசனத்திற்கு மலைப்பாதையேறிய பக்தர்கள் செல்வது உங்களுக்கு தெரியுமா?

கொடைக்கானலுக்கு அருகில் உள்ளது தாண்டிக்குடி. இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் அரசன் கொடையில் கதவு மலைக்கோயில் அமைந்துள்ளது. பாறையை தகர்த்து அமைத்த ஒத்தை யடி பாதையில் நடந்துதான் கோயிலை அடைய முடியும். பாதையின் இருபுறமும் கதவுபோல பாறைகள் அமைந்துள்ளதால் கதவுமலைக் கோயில் என்றும், கதவுமலை நாதன் எனவும் பெயர் உண்டாயிற்று.

சுற்றிலும் மலைமுகடுகளும், ஓங்கியுயர்ந்த மரங்களும், மலைக்கிராமங்களும் கண்களுக்கு விருந்து படைக்கும். எந்நேரமும் இயற்கை அன்னை ஊற்றெடுத்து பூவானம் தூவுவது போல் மலைச்சரிவில் சில்லிடும் தூரல் இருக்கும். தொல்லியல் சின்னங்களும் பொதிந்து கிடக்கும் மலையில் இன்றும் சித்தர்கள் நடமாட்டம் உள்ளதென கிராமத்தினர் நம்புகின்றனர். அமைதி யை வேண்டி வருவோர் ஆத்ம திருப்தியுடன் திரும்பிச் செல்ல மனமின்றி தவிப்பர்.

சித்திரை மாதம் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் சங்கமிப்பார். மலைச்சரிவில்,
அருகிலேயே ஐநூறு அடி பள்ளத்தாக்கில் அந்தரத்தில் குகைக்கோயிலில் சுவாமியை தரிசிக்கலாம்.

அமாவாசை, பவுர்ணமி விசேஷ நாட்கள், அசத்தலான இக்கோயிலுக்கு அச்சமின்றி ஆன்மிக சுற்றுலாவாக இளைஞர்கள் சென்று வருகின்றனர். வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக் குடிக்கு அரைமணி நேர இடைவெளியில் பஸ் வசதியுள்ளது. மலைக்கோயிலுக்கு முதியோர் செல்ல ஜீப் வசதி உண்டு. தொடர்புக்கு: 97872 45105ல் அழைக்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 
temple news
நெகமம்; கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar