பதிவு செய்த நாள்
03
டிச
2019
11:12
பழநி: பழநி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்குவதற்காக நடந்த பாலாலய பூஜையில் அமைச்சர்கள், கலெக்டர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ரூ. 10 கோடியில் கோபுரங்கள், பாதவிநாயகர் கோயில், மலை மீது அமைந்துள்ள இடும்பன் கோயில், வள்ளி சுனை, மயில் வாகனங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் திருப்பணிகள் துவங்க உள்ளன. இதற்கான பாலாலய பூஜைகள் நவ. 30ல் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று கோ பூஜை, கலச பூஜை, யாக பூஜைகள் நிறைவுபெற்று மூலவர் விமானத்தின் பின் பகுதியில் வடகிழக்கு மூலையில் கோமாதாவின் கொம்பால் தொட்டு பணியை துவக்கி வைத்தனர். பாலாலயம் நடந்தாலும், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் பக்தர்கள் தரிசனத்தில் எந்த மாற்றமும் இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி, கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார், தாசில்தார் பழனிச்சாமி, தொடர்பு அதிகாரி கருப்பணன் பங்கேற்றனர்.