பதிவு செய்த நாள்
03
டிச
2019
12:12
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை மாதம், அத்தி வரதர் வைபவம் நடந்தது. இவ்விழாவிற்காக, அங்குள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, நீராழி மண்டபத்தில் வீற்றிருந்த அத்தி வரதர், வெளியே எடுக்கப்பட்டார். பின், கோவில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்தி வரதரை, 48 நாட்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைபவம் முடிந்த பின், அத்தி வரதர், நீராழி மண்டபத்திற்குள் திரும்பவும் வைக்கப்பட்டார். இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், அனந்தசரஸ் குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டது. எனினும், நீராழி மண்டபம், பாதி நிரம்பிய நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை, பரவலாக மழை பெய்தது.இதனால், அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் அதிகரித்து, நீராழி மண்டபத்தில் துாண்கள் பாதி வரை, தண்ணீர் நிரம்பியுள்ளது. அடுத்தடுத்த மழையில், அனந்தசரஸ் குளம் முழுதாக நிரம்பி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.