கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.
ஒளி மாதம் என்றுஅழைக்கப்படும் கார்த்திகை மாதத்தில், திங்கட்கிழமை தோறும் சிவ பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.இதையொட்டி துணியில் அரிசியைக் கொட்டி அதன் மீது 108 வெத்தலை மற்றும் சங்குகளை வைத்து காலை முதல் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து பன்னிரு திருமுறைகளை தமிழில் கூறி அர்ச்சனை செய்தபடி பொதுமக்கள் அபி ஷேகம் செய்தனர். ஆகம விதிகள் படி வேள்வி, கலச, சங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டது.பின்னர் சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சங்கு, கயிலை வாத்தியம், கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.