மடத்துக்குளம் சோழர் வரலாறு பேசும் குலசேகர சுவாமி கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2019 02:12
மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள சோழமாதேவி கிராமத்தில், ஆயிரம் ஆண்டு கள் பழமையான மூன்றாம் வீரசோழரால் (1168 - 1196 ) குங்குமவல்லியம்மன் உடனமர் குல சேகர சுவாமி கோவில் கட்டப்பட்டது.சைவ கோவிலில், சிவனும் அம்பாளும் ஒரே சன்னதி யில் இருப்பது போல் அமைப்பது வழக்கம். இங்கு, இருவருக்கும் தனி கோவில்கள் உள்ளன. பிரதான கோவிலாக உள்ள குலசேகர சுவாமி கோவில், வயல்வெளிக்கு மத்தியில் அமராவதி கால்வாய் கரையில் அமைந்துள்ளது. நுழைவுவாயில் மண்டபத்தில் இரு நந்திகள் உள்ளன. முழுக்க முழுக்க கற்களால், கற்றளி முறையில் கோவில் அமைந்துள்ளது.
முன் மண்டபத்தில் மட்டும், 24 கல் துாண்கள் மேற்கூரையை தாங்கி நிற்கின்றன.வரலாற்றை பறைசாற்றும் வகையில், கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. வீர ராஜேந்திர சோழர் ( 1207 - 1256) தனது ஆட்சிக்குட்பட்டிருந்த இரட்டையம்பாடி (பழநி அருகிலுள்ள ஊர் ) கிராமத்தின் வருவாயை இந்த கோவிலுக்கு வழங்கியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக் கின்றன.பல நுாற்றாண்டுகளை கடந்து நிற்கும் கோவிலுக்கு, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.காலை 9:00 முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.தினமும் பூஜைகள் நடக்கிறது. பிரதோஷம், சிவராத்திரி மற்றும் முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மடத்துக்குளத்திலிருந்து கணியூர் ரோட்டில் ஐந்து கி.மீ., தொலைவில் கோவில் அமைந்துள்ளது.