மதுரை: தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் தற்போது திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மதுரை மாநகரின் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருபவள் தெப்பக்குளம் மாரியம்மன். மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் 6 கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மதுரையை எரித்த கண்ணகி சாந்தமாகி மாரியம்மனாக மதுரையின் எல்லையில் அமர்ந்திருப்பதாக தல புராணம் கூறுகிறது. கண்நோய், வயிற்றுவலி, வெயிலினால் ஏற்படும் நோய் போன்றவற்றறை தீர்க்கும் கண்கண்ட கடவுளாக மதுரை மக்கள் இவளை வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் தற்போது நடைபெற்றுவரும் உற்சவ விழாவை முன்னிட்டு, அம்மன் பூப்பல்லக்கில் அருள்பாலித்தார்.