பதிவு செய்த நாள்
04
டிச
2019
11:12
சென்னை : கார்த்திகை தீப திருவிழாவிற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நான்கு நாட்களுக்கு, 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி, வரும், 10ம் தேதி நடக்கிறது. இதைகாண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருவர். அதனால், வரும், 9 முதல், 12ம் தேதி வரை, கும்பகோணம், திருச்சி, சேலம், தர்மபுரி, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து, 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள், 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் கோட்டங்களில் இருந்து, 1,612 பஸ்கள், 2,615 நடைகள்; சென்னையில் இருந்து, 580 பஸ்கள், 1,480 நடைகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.