பதிவு செய்த நாள்
04
டிச
2019
10:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.
பொள்ளாச்சி கடைவீதியில் பழமை வாய்ந்த கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. அதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று யாகசாலையில் முதல்கால யாக பூஜையும், மாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது.இன்று காலை, 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், வரும், நாளை (5ம் தேதி) காலையில் ஐந்தாம் காலம் மற்றும் மாலையில் ஆறாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, காலை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம், சாற்றுமுறை, தச தரிசனம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.