திருவண்ணாமலையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. நெடுங்குணம் எனும் திருத்தலம். இறைவன் தீர்த்தஜலேஸ்வரர்; இறைவி பாலாம்பிகை. மிகப் பழமை வாய்ந்த இக்கோயிலில் அருள்பாலிக்கும் சப்தகன்னியர் சாந்நித்யம் மிகுந்தவர்கள். பருவம் மழை பொய்த்துப்போனால், விவசாயிகள் திரளாக வந்து இந்த சப்தகன்னிய ர்க்கு அபிஷேக ஆராதனைகள், படையல்கள் செய்து வழிபடுவார்கள். இப்படி வணங்கினால் சிலநாட்களிலேயே மழை வெளுத்து வாங்கும்; விளைச்சல் பெருகும் என்கின்றனர்.