திருவீழிமிழலையில் உள்ள சிவன் கோயில் மகா மண்டபத்துக்குச் செல்வதற்கு, கிழக்குப் புறத்தில், வாரத்தைக் குறிக்கும் விதமாக ஏழு படிகளும், தென் புறத்தில், மாதத்தைக் குறிக்கும் விதமாக பன்னிரெண்டு படிகளும், வடபுறத்தில் நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிகளும் அமைந்திருப்பது விசேஷ அம்சமாகும்.