கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் ஆவுடையான் தந்த அருளே போற்றிஓம் இழிந்த யாகத்தை இடறினாய் போற்றிஓம் ஈசன் மகனே இறைவா போற்றிஓம் உருத்திரன் சேவகன் ஆனாய் போற்றிஓம் உள்ளம் அமரும் உத்தமா போற்றிஓம் ஊக்கமும் அருளும் தருவாய் போற்றிஓம் எட்டுக் கைகள் உடையாய் போற்றிஓம் ஏறு ஊர்தியான் செல்வனே போற்றிஓம் ஐயன் ஆணை முடித்தாய் போற்றிஓம் ஒப்புமை இல்லா அழகனே போற்றிஓம் சிவனார் சிகையில் வந்தாய் போற்றிஓம் சீலம் அளித்துக் காப்பாய் போற்றிஓம் தும்பை சூட அதிர வருவாய் போற்றிஓம் பகைவரை பறக்க செய்வாய் போற்றிஓம் வெஞ்சமர் புரிந்த வீரவா போற்றிஓம் அரக்கர் படை ஓடச் செய்தாய் போற்றிஓம் கவின்மிகு வெற்றி பெற்றாய் போற்றிஓம் பைரவர் துணை கொண்டாய் போற்றிஓம் பாங்காய் வெற்றியடைந்தாய் போற்றிஓம் திசையெலாம் வெற்றி பெற்றாய் போற்றிஓம் பகனின் கண்ணைப் பறித்தாய் போற்றிஓம் பகலவன் பற்கள் பறித்தாய் போற்றிஓம் கதிர் ஒளி இழக்கச் செய்தாய் போற்றிஓம் சந்திரனைக் காலால் தேய்த்தாய் போற்றிஓம் அக்னி நாவை அறுத்தாய் போற்றிஓம் அவனது தடக்கை தறித்தாய் போற்றிஓம் அமரர் வாழ்வை முடித்தாய் போற்றிஓம் வசிட்டர் காமதேனு பறித்தாய் போற்றிஓம் குறுமுனி குகையில் அடைத்தாய் போற்றிஓம் அமரர் ஆணவம் அழித்தாய் போற்றிஓம் எமனின் வாகனம் பற்றினாய் போற்றிஓம் ஏகன் பணியை முடித்தாய் போற்றிஓம் எமனின் கொடியைப் பற்றியவா போற்றிஓம் வருணன் தடக்கை பிணைத்தாய் போற்றிஓம் மலைகளைத் தகர்த்த மன்னவா போற்றிஓம் விருட்சப் படையை அடக்கியவா போற்றிஓம் முனிவர் வெருவ முடித்தாய் போற்றிஓம் முன்வினை பாவம் தீர்த்தாய் போற்றிஓம் வேதியரை ஒளியச் செய்தாய் போற்றிஓம் தக்கன் தலையை அறுத்தாய் போற்றிஓம் தகரின் தலையை அளித்தாய் போற்றிஓம் தமருகன் தந்த தனயனே போற்றிஓம் தக்கன் செருக்கை அழித்தாய் போற்றிஓம் தாட்சாயணி சாபம் முடித்தாய் போற்றிஓம் காளியை துணை கொண்டாய் போற்றிஓம் காக்கும் காவல் தெய்வமே போற்றிஓம் வேள்வி அழித்த வெவ்வுருவே போற்றிஓம் தோல்வி அறியாத் தூயவரே போற்றிஓம் அட்டமா ஆயுதம் ஏந்தினாய் போற்றிஓம் இட்ட பணியை முடித்தாய் போற்றிஓம் தண்டமிழ் போற்றும் தலைவா போற்றிஓம் தனித்து கோயில் கொண்டாய் போற்றிஓம் தரணி எங்கும் நிறைந்தாய் போற்றிஓம் தமிழர் வாழ்வைக் காப்பாய் போற்றிஓம் ஆந்திராவில் அழகுற அமர்ந்தாய் போற்றிஓம் கர்நாடகத்தில் கவினுற இருந்தாய் போற்றிஓம் கேரளத்தில் கோயில் கொண்டாய் போற்றிஓம் பர்வத மலையுறை பாலகா போற்றி!ஓம் காஷ்மீரத்தில் உறைந்தாய் போற்றிஓம் பேசும் தெய்வம் ஆனாய் போற்றிஓம் தேவாரப் பண்ணில் ஒளிர்ந்தாய் போற்றிஓம் திருவாசக உந்தியில் அமர்ந்தாய் போற்றிஓம் வேதத்தில் சிறப்பிடம் பெற்றாய் போற்றிஓம் நாட்டுப்புற பாடலில் மிளிர்ந்தாய் போற்றிஓம் சிவனின் திருஉரு பெற்றாய் போற்றி ஓம் தீமைகளை அழித்தொழிப்பாய் போற்றிஓம் சூலம் ஏந்திட வந்தாய் போற்றிஓம் பகைவரை ஓடச் செய்தாய் போற்றிஓம் அதட்டொலி செய்த அற்புதா போற்றிஓம் ஆசறு ஆதி வானவனே போற்றிஓம் வாழ்வு தரும் வீரபத்ரா போற்றி ஓம் சினத்தீயின் வெம்மையே போற்றிஓம் சிந்தனையில் நிறைந்த சிவனே போற்றிஓம் சிவனின் தோற்றம் கொண்டாய் போற்றிஓம் சீராய் வினைகள் முடித்தாய் போற்றிஓம் அல்லோரை அழித்து ஒழிப்பாய் போற்றிஓம் நல்லோரை வாழ வைப்பாய் போற்றிஓம் கவலை தீர்த்து அருள்வாய் போற்றிஓம் கருவைக் காத்து நிற்பாய் போற்றிஓம் காலம் தோறும் சிறப்பாய் போற்றிஓம் கணபதியின் இனிய சோதரா போற்றிஓம் முருகனுக்கு மூத்த முதல்வனே போற்றிஓம் அருள்மிகு வீரபத்ர தெய்வமே போற்றிஓம் அருட்பெருங் கடவுள் ஆனாய் போற்றிஓம் வினைகள் அறுக்கும் வீரனே போற்றிஓம் வீரத்தை வழங்கும் வித்தகா போற்றிஓம் நித்தம் அருளைப் பொழிவாய் போற்றிஓம் உன்னத வாழ்வு அளிப்பாய் போற்றிஓம் காவல் தெய்வம் ஆனாய் போற்றிஓம் சைவம் தழைக்கச் செய்தாய் போற்றிஓம் செம்பொற் கழலடி செல்வா போற்றிஓம் வம்சம் செழிக்கச் செய்வாய் போற்றிஓம் வளமான வாழ்வு அளிப்பாய் போற்றிஓம் நாமகள் நாசியை அரிந்தாய் போற்றிஓம் நானிலம் சிறக்கச் செய்வாய் போற்றிஓம் திண்மை நிறைந்த தோளாய் போற்றிஓம் தீமை மனத்தைத் தீய்ப்பாய் போற்றிஓம் உலகம் உய்யச் செய்வாய் போற்றிஓம் உத்தமத் தெய்வமே பத்திரா போற்றிஓம் ஆசறு ஆதி வானவனே போற்றிஓம் ஆற்றல் மிக்க அடலரசே போற்றிஓம் தேவரை விரட்டிய தேவரே போற்றிஓம் தேயமெலாம் போற்றும் வீரரே போற்றிஓம் மாண்டவர்க்கு உயிர் கொடுத்தாய் போற்றிஓம் மீண்டும் போரிட்ட புத்திரா போற்றிஓம் மங்கையர் மாங்கல்யம் காப்பாய் போற்றிஓம் மாண்புறு தெய்வமாய் ஆனாய் போற்றிஓம் போற்றி போற்றி வீரபத்திரரே போற்றி